Skip to main content

கமல்ஹாசன் பிறந்தநாளுக்காக அரங்கேற்றப்பட்ட மேடை நாடகம்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

drama play staged for Kamal Haasan's birthday

 

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாள் நாளை (7.11.2021) தேதி கொண்டாடப்படுகிறது. இதனை வெகு விமரிசையாக கொண்டாட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி நவம்பர் 1 முதல் அவரின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் 7 லட்சம் பேருக்கு ‘நம்மவரின் ஐயமிட்டு உண்’ என்ற பெயரில் அன்னதானம் வழங்கிவருகின்றனர்.

 

இதனை அக்கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து ஒன்பது வாகனங்களில் சுமார் ஏழாயிரம் பேருக்கான உணவை வழங்கிடும் பயணத்தைக் கமல்ஹாசன் கொடியசைத்து துவக்கிவைத்தார். அதேபோல் நடிகர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மனமகிழ் மன்றம் சார்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள சத்குரு ஞானானந்தா அரங்கில் 'வினோதய சித்தம்' என்ற நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தை நேரில் பார்த்து, நாடகத்தில் நடித்த கலைஞர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

 

பின்னர் பேசிய அவர், “சென்னையில் அனைத்து வசதிகளும் அடங்கிய அற்புதமான நாடக அரங்கத்தை உருவாக்க உள்ளேன். ஒத்திகை இல்லாத துறையாக சினிமா இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் எடுக்கும் படத்தை 150 முதல் 170 தடவை வரை பார்த்து மெருகேத்துவேன். அதேபோல் அதனை திகட்டும் வரை பார்ப்பேன். தற்போது இருக்கும் காலத்தில் யூடியுப் வழியாக நாடகங்களைப் பார்ப்பதைவிட நேரடியாக வந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்