Skip to main content

'இசைக் குறிப்புகளைச் சேதப்படுத்திவிட்டார்கள்'- பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இளையராஜா போலீசில் புகார்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
Composer Ilayaraja complains against Prasad studio owner for 'damaging music notes'

 

பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

கடந்த 45 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைத்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தன்னை இடத்தைக் காலி செய்யச் சொல்லி தொல்லை செய்வதாக ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில், நீதிமன்றம் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயற்சி எடுத்தும், பலனலளிக்கவில்லை. அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசைக் குறிப்புகள், நோட்ஸ்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைச் சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார் இளையராஜா.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சட்டத்தை மீறி ஸ்டூடியோ உரிமையாளர் செயல்பட்டிருக்கிறார். எனவே சட்டத்தை மீறி செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் சாவி இளையராஜாவிடம் இருக்கும்போது, அவரின் அறை உடைக்கப்பட்டு இசைக்குறிப்புகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்