Skip to main content

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் தீவிர விசாரணை

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

College student lost their life in Sathyamangalam

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உருமையன் வீதியைச் சேர்ந்தவர் சாருஹாசினி (20). இவர் பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளோமா இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை சின்னசாமி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் அமுதவதி பராமரிப்பில் சாருஹாசினி வளர்ந்து வந்தார். அமுதவதி அவிநாசியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். 

 

வழக்கம்போல் அமுதவதி நேற்று காலை வேலைக்கு சென்று இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார். கதவைத் தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்து டிவியின் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அமுதவதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் சாருஹாசினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடலைப் பார்த்து அவரது தாய் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்