Skip to main content

கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; காதலன் கண் முன்னே நடந்த கொடூரம்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

college student incident kanchipuram

 

காஞ்சிபுரத்தில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த 18 வயதான மாணவி, அதே கல்லூரியில் பிபிஏ படிக்கும் மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் , காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு அருகே உள்ள குண்டு குளம் வயல் பகுதியில் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர், அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் நான்கு பேர் அந்தக் காதல் ஜோடியை கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர்.

 

பின்னர் காதலனை அடித்து சட்டையைக் கழற்றி கை கால்களை கட்டிவிட்டு, காதலன் கண் எதிரே அந்த நான்கு பேரும் மாறி மாறி அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவர்கள் இந்த சம்பவத்தையும் செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதையடுத்து இருவரிடமும் இருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வீட்டுக்குச் சென்ற காதல் ஜோடி நடந்ததை அந்த மாணவியின் வீட்டுக்கு தெரிவித்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் மற்றும் விஷ்ணு காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் காதலர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர்களில் ஒருவன் பெயர் விமல் என்பது மட்டும் தெரிய வந்தது. அதை வைத்து விப்பேடு பகுதியில் விமல் என்பவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸ் பாணியில் விசாரணை நடத்தியதில், செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த ஊமை மணிகண்டன், விப்பேடு விமல் குமார், சிவக்குமார், மரம் என்கிற தென்னரசு ஆகிய நான்கு பேரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இவர்களை கைது செய்த போலீசார் மேலும் இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்று  விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் காஞ்சிபுரத்தையே பரபரப்பாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்