Skip to main content

ஆறு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம்!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

New SPs appointed for six districts!

 

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யாக நிஷா, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக சுகுணா சிங், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக சரோஜ்குமார் தாகூர், நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக சாய்சரண் தேஜஸ்வி, கோவை மாவட்ட எஸ்.பி.யாக பத்ரிநாராயணன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக ஹரிகிரண்பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

மேலும், சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையராக அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக அபிநவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை அகாடமி பயிற்சி துணை இயக்குநராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் விமலா, லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்