Skip to main content

போக்குவரத்து காவலர்களை எச்சரித்த முதல்வர் 

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
narayanasamy



புதுச்சேரி மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்து, அவர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்கும் திட்டம் தற்போது நடைமுறைபடுத்தபட்டுள்ளது. 
 

இந்நிலையில் சென்னையில் கலைஞரின் சிலை திறப்பு விழாவிற்காக முதலமைச்சர் நாராயணசாமி கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்று கொண்டிருந்தார். 
 

காலாப்பட்டு அரசு பொறியியல் கல்லூரி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டு தன்னுடைய வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அங்கு போக்குவரத்து போலீசார் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பிடித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
 

போலீசாரின் அருகே சென்ற நாராயணசாமி, ஸ்பாட் பைன் நடைமுறைப்படுத்தபடும் விதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்ளகூடாது என்றும், அதேபோல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை முதல்முறை எச்சரித்து அனுப்பும்படியும், இரண்டாம் முறை பைன் போடும்படியும் காவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சோதனை என்ற பெயரில் பொதுமக்களை சிறமபடுத்துக்கூடாது என்றும் தெரிவித்தார். 

 

பின்னர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களை அழைத்து லைசன்ஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவது தவறு என அன்பாக அறிவுரை செய்து அவர்களை அனுப்பி வைத்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்