Skip to main content

கொட்டும் மழையால் குப்பையில் காய்கறிகள்! கோயம்பேடு சந்தையின் அவலம்... (படங்கள்)

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பெய்துவரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. 

 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

 

கோயம்பேடு பகுதியில் பெய்துவரும் மழையால் காய்கறி சந்தை முழுவதும் நீரில் மூழ்கியது. பல ஆயிரம் மதிப்புள்ள காய்கறிகள் மழையில் நனைந்து வீணாகி குப்பையில் கொட்டப்பட்டதாலும், மழை தொடர்வதால் வியாபாரம் நடைபெறாமல் சந்தை வெறிச்சோடிக் காணப்படுவதாலும் வியாபாரிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்