Skip to main content

படகுகள் மோதி விபத்து; சோகத்தில் மீனவ கிராமங்கள்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

boat incident in vedharanyam in nagapatnaam district

 

சக மீனவரின் படகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென் கிழக்கே உள்ள கடல் பகுதியில் செருதூரைச் சேர்ந்த ராஜேந்திரன்(58), எல்லப்பன்(46), முருகவேல்(40) ஆகிய 3 மீனவர்களும் கடலில் 12 மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த நாகை அக்கரப்பேட்டையைச் சேர்ந்த அனிதா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு மோதியதில் பைபர் படகு கடலில் மூழ்கியது. படகு கடலில் மூழ்கத் தொடங்கியதும் மூன்று மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்துள்ளனர்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு மோதிய விசைப்படகு சம்பவ இடத்திற்கு வந்து மூன்று மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலையும் மற்ற இரு மீனவர்கள் எல்லப்பன், முருகவேல் ஆகியோரை கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். கடலில் மூழ்கிய படகை மீட்க முடியவில்லை.

 

வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் படகு உரிமையாளர் எல்லப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். படகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்