Skip to main content

குத்தாட்டத்தை ரசித்துவிட்டு பேசும் முன்பே கலைந்த மக்கள்: வேகமாக மைக்கை வாங்கி பேசிய அமித்ஷா

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

17 வது மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியுடன் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அமைத்து 4 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

 

bjp

 

இதில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜா வை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று பாஜக தலைமையின் நெருக்கடியால் அதிமுக தலைமை தீவிரம் காட்டுவதாக செய்தாலும் பாஜக தவிர மற்ற எந்த கூட்டணி கட்சியும் மனப்பூர்வமாக வேலை செய்யவில்லை. 

 

இந்த நிலையில் தான் பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா தூத்துக்குடி பிரச்சாரம் செய்துவிட்டு மதியம் சிவகங்கை தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிலக்கு கிராமத்தில் ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு அங்கேயே பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது.

 

bjp

 

மாவட்டம் முழுவதும் இருந்து காலை 10 மணிக்கே மக்களை சரக்கு லாரிகளில் அழைத்து வந்தனர். மதியம் வரை காத்திருந்த மக்கள் பாதிப் பேர் வீடு திரும்பினார்கள். கூட்டத்தை நிறுத்தி வைக்க மதுரையிலிருந்து அழைத்துவரப்பட்ட 20 கலைஞர்களின் குத்தாட்டம் கூட்டத்தை ஓரளவு தக்கவைத்தது. சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக வந்தார் அமீத்ஷா. அவருக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக் கொண்டிருந்தபோது மொத்த கூட்டமும் வெளியேறியது. 

 

bjp

 

மேடையில் இருந்து பார்த்த அமித்ஷா வேகமாக எச்.ராஜா வை பார்த்து முறைத்தவர் அமைச்சர் பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டு மைக் பிடித்து பேசினார். அவர் பேச்சை எச்.ராஜா மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சுமார் 8 நிமிடங்களுக்கும் கூட்டம் காணாமல் போனது. இதைப் பார்த்து அமித்ஷா முகம் மாறியது.

    

bjp

 

தமிழ்நாட்டில் ஒரு எம்.பி மட்டும் இருந்தாலும் ஏராளமான நலத்திட்டங்கள் செய்திருக்கிறது மோடி அரசு. மீனவர்களுக்கா சாகர்மாலா திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எச் ராஜாவை வெற்றிபெற செய்ய வேண்டும் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்