Skip to main content

'அண்ணாத்த' படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்குத் தடை!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

annathe movie update

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள 'அண்ணாத்த' படத்தை  இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

 

இந்த படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், இந்த படத்தை இதுபோன்ற வெளியீட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால், சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை  வெளியிடத் தடை விதிக்க கோரி சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சினேகா ஆஜராகி சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிடத்  தடை விதித்து உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்