Skip to main content

மிரட்டிப் பார்க்கலாம் மிரளமாட்டோம்.. அறந்தாங்கி எம்.எல்.ஏ பேட்டி!!

Published on 28/10/2018 | Edited on 28/10/2018

அ.ம.மு.க ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி பேட்டி அளித்தார்...
 

என்னிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்புவதாக கொறடா சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாக பத்திரிகை செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். இதுவரை எந்த நோட்டிசும் வரவில்லை. அப்படி வந்தால் அவர்களின் கேள்விகளுக்கு நேரில் சென்று சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.
 

 

MLA

 

இணைப்புபற்றி சொன்னார்கள். இப்படி எல்லாரும் இணைய வேண்டும் என்று விரிசல் ஏற்பட்டபோதே முயற்சி எடுத்து முதலில் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடம பேசிவிட்டு பிறகு எடப்பாடியிடம் போய் பேசினேன். ஆட்சியின் அதிகார தோரணையிலும், பா.ஜ.க அழுத்தம் காரணமாகவும் இணக்கமாக வரவில்லை. அப்போது ஒ.பி.எஸ். ஒதுங்கி இருந்த நேரம். அதனால் நான் அ.ம.மு.க பக்கம் போகவேண்டிய நிலை வந்தது. இப்போது இணைய வாருங்கள் என்று அழைப்பது காலங்கடந்த ஞானம் என்று தான் சொல்ல முடியும்.

 

ஜெ.வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களை அநியாயமாக பழிகொண்டுவிட்டு இப்போது இணைப்பதென்பது சாத்தியமில்லை. துரோகம் செய்து எதிர்த்து வாக்களித்தவர்களை உடன் வைத்துக் கொண்டு நியாயம் கேட்கச் சென்றவர்களை நீக்கியது எப்படி நியாயமானதாக இருக்க முடியும். எடப்பாடி, ஒ.பி.எஸ். அனைவரும் ஏற்றுக் கொண்ட பொதுச் செயலாளர் சசிகலா காட்டிய துணைப் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலில் கட்சியை, ஆட்சியை நடத்த வேண்டும் என்று சொன்னதை மறந்து மத்தியில் ஆட்சி செய்பவர்களின் அடிமைப்பட்ட ஆட்சியாக நடத்திக் கொண்டு தன்னை உருவாக்கியவர்களுக்கு துரோகம் செய்யும் மக்கள் விரோத ஆட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் செர்த்து நியாயம் கேட்கச் சென்றவர்களை நீக்குவது நியாயமா? ஆனாலும் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். தவறு செய்தவர்கள் விலக்கி வைக்கப்பட வேண்டும்.
 

விலக்கி வைக்கப்பட வெண்டியவர்கள் யார்? 

 

தவறு செய்தவர்கள் ஒ.பி.எஸ். – ஈபி.எஸ் ஆகியோர் தானே..

 

தினகரன் பதவி ஆசைக்காக 18 எம்.எல்.ஏக்களை பலிகடாவாக்கிவிட்டார் என்று திவாகரன் பேசிவருகிறாரே?
 

திவாகரன் கதையெல்லாம் முடிந்து போனது. அதைப்பற்றி எல்லாம் பேசி நேரத்தை வீணடிக்க  விரும்பவில்லை.
 

தேர்தலைச் சந்திக்க 18 பேரையும் அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்ட பிறகு முடிவு செய்யப்படும்.
 

நாங்க கட்சி தாவவில்லை. இன்றும் கட்சிக்கு பொதுச் செயலாளர் சசிகலா தான். அதனால் கட்சி தாவல் சட்டத்தில் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. 

 

18 பேர் நீக்கப்பட்ட நிலையில் 3 பேருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்புவது என்பது மிரட்டி பணிய வைக்கும் திட்டமா?

 

அவர்கள் அப்படி நினைத்து அனுப்பலாம். இதற்கெல்லாம் மிரளமாட்டோம்.

பா.ஜ.க தான் அ.தி.மு.க ஆட்சியை நடத்துகிறது என்று சொல்றீங்க. ஆனால் தம்பிதுரை பா.ஜ.கவுக்கு எதிராக பேசிவருகிறாரே?

 

தம்பிதுரை டெல்லியில் ஒன்று பேசுவார், சென்னையில் ஒன்று பேசுவார் வீட்டில் ஒன்று பேசுவார். ஆனால் அடிமைப்பட்ட ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். 

 

அ.ம.மு.க பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் பிறந்தநாளை அ.ம.மு.க கொண்டாடவில்லையே ஏன்? சசிகலா வேண்டும் நடராஜன் வேண்டாமா? 

எந்தெந்த விழாக்கள் கொண்டாட வேண்டுமோ அந்த விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. எதையும் ஒதுக்குவதில்லை என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்