Skip to main content

'நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்க' - 23 தீர்மானங்களை நிறைவேற்றிய அதிமுக

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
AIADMK passed 23 resolutions 'Ensure Parliament Security'

கடந்த வருடம் ஜூன் 22 ஆம் தேதி அதிமுகவின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக இன்று அதிமுக பொதுக்குழு கூடியுள்ளது.

அதிமுகவின் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை இபிஎஸ் முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்துள்ளார்.

தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் பேசினர். அதிமுக நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்கள்; மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக செய்யவில்லை என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கப்படவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழ் மொழியைக் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சார்ந்த செய்திகள்