Skip to main content

அதிமுக செயற்குழு: கேள்வி கேட்க தயாராகும் ஓ.பி.எஸ். டீம்!!!

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
ops-eps


அதிமுக செயற்குழு கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. இந்த செயற்குழுவில் பாராளுமன்றத் தேர்தல், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வரப்போகும் தீர்ப்பு, அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.

 

 


18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பு ரகசியமாக தலைவர்கள் மத்தியில் பேசப்படும். ஆனால், பாராளுமன்ற தேர்தல் வியூகம், சட்டமன்ற இடைத்தேர்தல் வியூகம் ஆகியவை பொதுவாக விவாதிக்கப்படும். இதுகுறித்த விவாதங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுக தலைவர்கள் பிஸியாகிவிட்டனர். 
 

 

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்தாலும், இரு அணிகளும் இணைந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கட்சிக்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்படவில்லை. அத்துடன் கே.சி.பழனிசாமி, ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆகியோரின் நியமனங்கள் செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


இந்த செயற்குழுவில் ஓ.பி.எஸ். அணி தாங்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து கேள்விகள் கேட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெறும் அதிமுக செயற்குழு பரபரப்பு மிகுந்ததாக அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பதை ஈ.பி.எஸ். வலியுறுத்துவார். இது தினகரன் அணியில் சேரும் அதிமுகவினரை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆக எல்லா விதத்திலும் இந்த செயற்குழு கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்