Skip to main content

பாதுகாப்பு வீரர்கள் 14 பேர் படுகொலை - மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

hjk

 

காஷ்மீரில் நேற்று (13.12.2021) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

காஷ்மீரில் நேற்று முன்தினம், குறிப்பிட்ட இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரங்கிரீத் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் என்கவுண்ட்டர் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பந்த் சவுத் பகுதியில் ஜூவன் என்ற இடத்தில் நேற்று மாலை ரோந்து சென்ற பாதுகாப்புப் படையினர் வாகனம் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். 

 

இதில் அந்த வாகனத்தில் இருந்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பயங்கரவாதிகள் அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்குத் தமிழ்நாடு முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த  வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்