Skip to main content

"மோடிக்காக ஸ்ம்ரிதி இராணி தமிழர்களை பழிவாங்கினார்" - திருமுருகன் காந்தி  

Published on 13/05/2018 | Edited on 14/05/2018

கடந்த வாரம், சென்னையில் "அழியப் போகிறது தமிழ்நாடு. என்ன செய்யப் போகிறோம் நாம்?" என்ற தலைப்பில் தமிழர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
 

thirumurugan gandhi



"உலகத்துலேயே நடக்காத தேர்வையா நடத்துறீங்க? அவ்ளோ பெரிய தேர்வா நீட்? ஐ.ஏ.எஸ் படிச்சு நாட்ட ஆளப் போற தேர்வா அது? இவ்வளவு கறாரா நடத்துறீங்க? ஐ.ஏ.எஸ் தேர்வுக்கே இவ்வளவு கட்டுப்பாடு இல்ல, ஆனா நீட்டுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றான் என்றால் தமிழ் பிள்ளைகள், தமிழ் குழந்தைகள் மருத்துவம் படிக்கூடாது; அதுதான் அவன் எண்ணம்.

நூறு வருஷத்துக்கு முன்னாடி சென்னை பல்கலைகழகத்தில் சமஸ்கிருதம் படிச்சு பாஸ் பண்ணாதான் மருத்துவர் ஆக முடியும் என்ற ஒரு முறை இருந்தது. அதை நீதிக்கட்சி ஒழித்தது. அப்படி அந்த முறை ஒழிக்கப்பட்டதால்தான் அனைத்து சாதியினரும் மருத்துவராக முடியும் என்ற நிலை வந்தது. அதனால்தான் நம்ம தெருவுல உள்ள நம்ம குழந்தைங்க நம்மளுக்கு உக்காந்து வைத்தியம் பாக்குது. வடமாநிலத்துக்காரன் வருவானா? இந்த நிலைமையையெல்லாம் மாற்றத்தான் மத்திய பி.ஜே.பி அரசும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகளும் வேலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த மருத்துவ கல்வியை உயர்சாதிகாரர்களுக்கு மட்டும் கொடுத்தா அவங்க நம்மள தொட்டு வைத்தியம் பார்ப்பார்களா, அது சாத்தியமாகுமா? அதையெல்லாம் நம்மிடமிருந்து புடுங்கத்தான் நீட் தேர்வுன்னு சொல்லி நம்ம பிள்ளைகள ராஜஸ்தானுக்கு அனுப்பறது, கேரளாவுக்கு அனுப்பறது. இங்கே இருக்கும் ராஜஸ்தான்காரனுங்கள திருப்பி அனுப்புனா நம்ம பிள்ளைகள் இங்க எழுதும். தமிழ்நாடு வந்தேறிகளோட வேட்டைக்காடா மாறிக்கொண்டு வருகிறது. 

 

modi smriti irani

 


என்றைக்கு குஜராத்திகள் குஜராத்துக்குப் போறானோ அன்னைக்கு காவிரி வீடு வந்து சேரும். நீட் தேர்வுல இவன் காதுல இருக்க கம்மல கழட்டறது, பெண்களுடைய மாண்பை குறைக்கும்படி நடந்து கொள்வது என்று செயல்படுகிறான். பெற்றோர்களுக்கு முதலில் சுயமரியாதை வேணுங்க. தன் பிள்ளைக்கு அப்படி நடக்கும்போது செருப்ப கழட்டி அடிச்சிருக்கணும் நீங்க. அடிச்சிருக்கணுமா இல்லையா? உங்க பிள்ளைங்க தேர்வெழுதி மார்க் எடுத்து மருத்துவராகி சம்பாரிச்சு கொடுக்கணும்'னு நெனச்சீங்கனா ஒவ்வொரு தேர்வு மையத்திலயும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டிவரும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒவ்வொரு அப்பனும் செருப்ப கழட்டி அடிச்சிருந்தானா இவன் இந்த வேலைய செய்திருக்கமாட்டான். அந்த அடி மத்திய அரசுக்கு விழுந்த செருப்படியாக இருந்திருக்கும். 

இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்ததற்கான காரணம் என்ன? தமிழ் மாணவர்களின் வாழ்க்கையை அழித்ததற்கான காரணம் என்ன? நீங்க மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுனீங்க. அதனால் மோடிக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய கல்வித்துறையை சார்ந்த ஸ்ம்ரிதி  இராணி தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டுமென்று, பழிவாங்கும் இந்த வேலையை செய்திருக்கிறார். வேற ஒன்றும் கிடையாது. நீ எத்தனை முறை எங்கள் இனத்தைப் பழிவாங்கினாலும் நாங்கள் நெருப்புப் பறவையாக வந்து நிற்போம். ஒரு போதும் நாங்கள் அஞ்சப்போவது இல்லை".





 

 


 

சார்ந்த செய்திகள்