Skip to main content

ரேபரேலி விரைந்த ராகுல்காந்தி; கடுமையாக சாடிய பிரதமர் மோடி!

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
"Rahul competes in RaeBareli due to fear of failure" - PM Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயரை வெளியிடாமல் தொடர்ந்து மெளனம் காத்து வந்தது. இதற்கிடையில் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதே சமயம் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இன்று (03.05.2024) மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. மே 20 ஆம் தேதி இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியிலும், கே.எல். சர்மா அமேதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி போட்டியிடுகிறார். மேலும் கே.எல். சர்மா அமேதியிலும் போட்டியிட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி ரேபரேலியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை எனவும் கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்ற சோனியா காந்தி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை எனவும் கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்ற சோனியா காந்தி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

"Rahul competes in RaeBareli due to fear of failure" - PM Modi

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பர்தமான் - துர்காபூரில் பாஜக சார்பில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தலைவர் தேர்தலில் போட்டியிடத் துணிய மாட்டார் அவர் ஓடிவிடுவார் என்று நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கூறியிருந்தேன். வயநாட்டில் தோற்கப் போகிறார் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதன்படி வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்பதால் தான் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலியைத் தேர்வு செய்து ராகுல் போட்டியிடுகிறார். அதாவது தோல்வி பயத்தால் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார். அமேதியில் மீண்டும் போட்டியிட மிகவும் பயந்து ரேபரேலியை நோக்கி ராகுல் ஓடிக்கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்