Skip to main content

“தமிழகத்துக்கு துரோகம் செய்யும் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்” -எல்.முருகன்  

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
L.Murugan

 

 

தமிழக நலனில் அக்கறை காட்டுவதாக சொல்லிக்கொண்டு தமிழகத்துக்கு துரோகம் செய்யும் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொள்வது நலன் பயக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விவசாய சேவைகள் சட்டம் 2020 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக அகற்றப்படும்.

 

இந்த மூன்று சட்டங்களுமே விவசாய உற்பத்தியை பெருக்கி விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுக்கும் தீர்வை சொல்கின்றன.

 

ஆனால் பா.ஜ.க. அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்று கண்மூடித்தனமாக அறிக்கை விடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. லட்சக்கணக்கான தமிழக சிறு விவசாயிகளுக்கு பலவகைகளில் உதவும் இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள், இடைத்தரகர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் துணைப்போகிறார்கள் என்பதே உண்மை. தமிழக நலனில் அக்கறை காட்டுவதாக சொல்லிக்கொண்டு தமிழகத்துக்கு துரோகம் செய்யும் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொள்வது நலன் பயக்கும்” இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்