Skip to main content

நாங்குநேரியில் அதிமுகவா? பாஜகவா? ஆலோசனையில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி சிலர் விருப்ப மனு அளித்திருந்தனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் செய்தனர்.

 

aiadmk


 

இதற்கிடையில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அதிமுகவிடம் பாஜக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேட்டபோது, நாங்குநேரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குவது குறித்து தலைமைதான் முடிவு செய்யும். தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் வெற்றி பெறுவோம் என்றார்.


 

இந்த நிலையில் இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் நாங்குநேரியில் அதிமுக போட்டியிடுவதா? பாஜகவுக்கு ஒதுக்கலாமா? என விவாதிக்கப்பட உள்ளது. அதிமுக போட்டியிடுவது என்றால் யார் வேட்பாளர், போட்டியிடும் வேட்பாளருக்காக தொகுதிக்கு சென்று வேலை செய்பவர்கள் யார் யார் எனவும் விவாதிக்கப்பட உள்ளது. 


 

காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் ஏற்கனவே அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் குமரி நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். குமரி அனந்தன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு பெற்றுள்ளார். ஆகையால் அதிமுக அங்கு வெற்றி பெறுவது கடினம். பாஜக விருப்பப்பட்டால் அவர்களுக்கே நாங்குநேரியை ஒதுக்கிவிடலாமா என்பது குறித்தும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 
 

இதேபோல் விக்கிரவாண்டி தொகுதி ஏற்கனவே திமுக வெற்றி பெற்ற தொகுதி, தற்போது நா.புகழேந்தியை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. திமுகவுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்றும் விவாதிக்கப்பட உள்ளது. 
 



 

சார்ந்த செய்திகள்