Skip to main content

திரிபுராவில் மார்க்ஸ் - எங்கல்ஸ் சாலை பெயர் மாறியது?

Published on 12/04/2018 | Edited on 12/04/2018

திரிபுரா மாநிலத்தில் மார்க்ஸ் - எங்கல்ஸ் சாலையின் பெயர் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Marx

 

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகால ஆட்சி செய்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியின் மூலம் ஆட்சியை இழந்தது. பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த சில தினங்களிலேயே அம்மாநிலத்தில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரண்டு இடங்களில் சிபிஎம் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலைகள் தகர்க்கப்பட்டன. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

திரிபுராவில் பாஜக ஆட்சியமைத்த நிலையில், அங்குள்ள சாலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, உள்ளூர்த் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் சார்பில், திரிபுரா முதல்வர் அலுவலகம் இடம்பெற்றுள்ள மார்க்ஸ் - எங்கல்ஸ் சாலையின் பெயரை மாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

அந்த உத்தரவின்படி, தற்போது மார்க்ஸ் - எங்கல்ஸ் சாலையின் பெயரை, பாரதிய ஜன சங் அமைப்பின் நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜீயின் பெயரால் மாற்றப்பட்டது. திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டபோது, மேற்கு வங்கம் மாநிலத்தில் ஷியாமா பிரசாத் முகர்ஜீ சிலை மீது கறுப்பு மை பூசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்