Skip to main content

"தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்" - கமல்ஹாசன் பேச்சு!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

MAKKAL NEEDHI MAIAM KAMAL HAASAN SPEECH

 

சென்னையில் தனியார் தொலைக்காட்சியின் சார்பில் நடைபெற்ற 'தென்னிந்தியாவின் 2021' என்ற நிகழ்ச்சியில், பங்கேற்றுப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "ஊழலற்ற ஆட்சியைத் தருவோம்; காந்தி, காமராஜர் போன்றோர் ஏழைகளின் தலைவராக இருந்தனர்; நாங்களும் அப்படித்தான். எம்.எல்.ஏ. ஆனபின் எம்.ஜி.ஆர். சுமார் 50 படங்களில் நடித்தார். சினிமா- தொழில், அரசியல்- நோக்கம். வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நல்லவர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தேன். அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. அரவிந்த் கெஜ்ரிவால் நல்ல முன்னுதாரணம்; தி.மு.க., அ.தி.மு.க.வில் சில நல்லவர்களும் உள்ளனர்"  என்றார். 

 

தேர்தலில் தோற்றால் அரசியலில் இருந்து விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு, "இல்லை" என்று பதிலளித்த கமல்ஹாசன், "எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்" எனத் தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்