Skip to main content

தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம்!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகம் மறைந்த தலைவர் பாலதண்டாயும் நினைவாக 'பாலன்' இல்லம் என்ற பெயரில் சென்னை தி.நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் ஏழு மாடிகள் கொண்ட இந்தப் புதிய கட்டிடம் திறப்பு விழா செய்யப்பட்டது.

 

தமிழகம் முழுக்க உள்ள கம்யூனிஸ்ட் தொண்டர்கள், நிர்வாகிகள், உழைப்பாளிகள், பொதுமக்கள் கொடுத்த நன்கொடை இவை இல்லாமல் வங்கிக் கடன் பெற்று பல கோடி ரூபாயில் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் இருக்கும் போது இக்கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடமான பாலன் இல்லம் பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியுள்ளார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 22ஆம் தேதி தமிழகம் முழுக்க அனைத்து ஊர்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் பற்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்", "உழைப்பாளிகளின் வியர்வையில் உருவானது பாலன் இல்லம்" எனக்  கோஷங்கள் எழுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்