Skip to main content

சிவகாசி சிறுமி கொலை வழக்கு குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து... கோபத்தில் திமுகவினர்!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

விருதுநகர் மாவட்டம், சிவகாசி- கொங்கலாபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 20- ஆம் தேதி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாள்.அப்போது இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்று வீட்டருகில் உள்ள முட்புதர் பக்கம் போகச் சொல்லியிருக்கிறார். போனவள் நெடுநேரமாகத் திரும்பி வராத நிலையில், தேடிப்பார்த்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மறு நாள் காலை சற்று தள்ளியிருந்த புதர் அருகே சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் காவல்துறை உயரதிகாரிகளின் அறிவுரையின் பேரில் ஐந்து தனிப்படைகள் அமைத்து  100- க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்பு சிறுமி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மோஜாம் அலி என்பது கண்டறியப்பட்டது.
 

bjp



 

bjp



இந்த நிலையில், சிவகாசியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை வழக்கிற்கு ஸ்டாலின், திருமாவளவன், கனிமொழி, வைகோ ஏன் போராடவில்லை,எங்கே போனார்கள்? என்று கேள்விக்கு நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இருங்க. அந்த சிறுமி என்ன சாதி மதம்னு அதனால எங்களுக்கு என்ன அரசியல் ஆதாயம்னு தெரியாம எப்படி போராடறது.  இந்த மீடியா வேற ரஜினியைவிட்டு வேற பேசவே விட மாட்டேங்கிறாங்களே. அதான். என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் திமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்