Skip to main content

"பிரதமர் கால் தூசி கூடப் பெறாத சொறி நாய் குலைக்குது"... பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மனதின் குரல் எனும் மன்-கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், கரோனவைத் தடுப்பது வாழ்வா சாவா என்ற போராட்டத்தைப் போன்றது. நான் எடுத்த இந்தக் கடினமான முடிவால் சிரமத்திற்கு உள்ளானவர்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இந்த முடிவால் என் மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கரோனாவைக் கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழி கிடையாது. விதியை மீறி வெளியே வருபவர்கள் உயிரோடு விளையாடுகின்றனர். விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் சிலர் கரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து தப்ப முடியாது என்றார்.
 

 

 

bjp



இந்த நிலையில் கீதை படியுங்கள் என்று கெஜ்ரிவால் கூறியதற்கு எழுத்தாளர் அருணன் , தி.க. வீரமணி ஐயா எழுதிய கீதையின் மறுபக்கமும் படியுங்கள் என்று கூறினார். அதற்கு நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், "அதைப் படிச்சு உங்களைப் போன்ற நாசமாய்ப் போனமனுஷங்க திருந்தத்தான் கீதை படிக்க வேண்டும். காலையில பல்லுகூட விளக்காம மூளை,மனசு பூரா மலத்ததை வச்சுக்கிட்டு எழுதினா இப்படித்தான் வரும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் நம் நாட்டின் பிரதமருக்கு கால் தூசி கூடப் பெறாத சொறி நாயெல்லாம் அவரைப் பார்த்து குலைக்குது என்றும் கூறியுள்ளார்." இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்