Skip to main content

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு -16ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

OPanneerselvam


ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.-க்களை சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு வரும் 16ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
 


ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் முடிவு செய்வார் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உத்தரவிட்டது. சபாநாயகர், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என  தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரையிலோ அல்லது சபாநாயகர் முடிவெடுக்கும் வரையிலோ அந்த 11 எம்.எல்.ஏ.-க்களும் சட்டப்பேரவையில் நுழைய தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தது.

 

 


வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்