Skip to main content

"ஒரே மாதிரியான பயண நெறிமுறைகளை பின்பற்றுக'- மாநிலங்ககளுக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் கடிதம்!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

UNION MINISTRY OF TOURISM

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மேலும் வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் மாநிலங்களில் கரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு, சில மாநில அரசுகள் வெளிமாநில பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளன. இருப்பினும் அதில் சில மாநிலங்கள் அரசுகள், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ள பயணிகளை ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமலே தங்கள் மாநிலங்களுக்குள் அனுமதித்து வருகின்றனர்.

 

அதேநேரத்தில் மேற்குவங்கம், கர்நாடகா, கோவா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்ளில், இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக உள்ளது. இந்தநிலையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

 

அந்த கடிதத்தில், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியிருந்தால் அவர்களிடம் ஆர்டி-பிசிஆர் சான்றிதழை கேட்கவேண்டாம் எனவும், அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான பயணகட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் எனவும் மத்திய சுற்றுலாத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்