Skip to main content

ட்ரெண்டான 'BoycottHyundai'... விளக்கமளித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம்

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

Trend 'BoycottHyundai' ... explained by Hyundai India

 

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தின் விற்பனையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தேசியத்தை மதிப்பதில் உறுதியாக இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

 

ஹூண்டாய் நிறுவனத்தின் பாகிஸ்தான் டீலர் ஒருவரின் ட்விட்டர் பக்கத்தில் " காஷ்மீரில் சுதந்திரத்திற்கான போராட்டம்" எனப் பதிவிடப்பட்டதை கண்டித்து, ஹூண்டாய் தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் #BoycottHyundai ஹேஷ்டாக் ட்ரெண்டானது. 

 

இதற்கு பதிலளிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஹூண்டாய் இந்தியா நிறுவனம், இந்திய சந்தையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் இருப்பதாகவும், தேசியத்தை மதிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாம் வீடு இந்தியா என்றும், உணர்வுகளை மதிக்காத கருத்துகள் வெளியிடப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்