Skip to main content

அதிகரிக்கும் கரோனா: முதல்வர்களோடு ஆலோசிக்கும் பிரதமர்!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

modi

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் நாளையிலிருந்து (17.03.2021) 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது இரவு 1௦ மணிமுதல் காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் கரோனா அதிகரித்து வருவதை தொடர்ந்து, மக்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பது குறித்தும் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு நாளை காணொளி மூலம் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்