Skip to main content

”கேமராமேனை கொலை செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல”- நக்ஸல்

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
d


சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கும் போலிஸ்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு போலிஸாரும், தூர்தர்சன் கேமரா மேன் ஒருவரும் மரணம் அடைந்தனர். கேமராமேன் மரனமடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில், இந்த கொலை குறித்து நக்ஸல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்களுக்கு ஊடகத்தை சேர்ந்தவர்களை கொல்ல வேண்டும் என்கிற எண்ணம் கிடையாது. இது தவறுதலாக நடந்தது” என்று எழுதப்பட்டுள்ளது.

  
ஆனால், இதை மறுத்துள்ள தண்டேவாடா எஸ்பி அபிஷேக் பல்லாவ், ''சாஹு தவறுதலாகக் கொல்லப்பட்டார் என்றால் ஏன் கேமராக்கள் சூறையாடப்பட்டன? அதில் ஊடகவியலாளர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன.
 

உயிர்த் தியாகம் செய்த அச்சுதானந்த சாஹுவின் மண்டை சேதமடைந்திருந்தது. அவரின் உடலில் ஏராளமாக புல்லட் காயங்கள் இருந்ததும் தெரியாமல் நடந்ததா'' என்று நக்சல் இயக்கத்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சார்ந்த செய்திகள்