Skip to main content

பைசரின் கோரிக்கையை ஏற்கிறது ஒன்றிய அரசு; தடுப்பூசியின் விலை குறித்து வெளியான தகவல்!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

pfizer vaccine

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் v  தடுப்பூசியும் விரைவில் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இருப்பினும் இந்தியாவில் தற்போது நிலவும் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு தொடரும் என்ற நிலையே நீடிக்கிறது.

 

இதனால் தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக, பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நிறுவனத்துடன் ஒன்றிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. பைசர் நிறுவனமோ, இந்தியாவிற்கு தடுப்பூசியளிக்க சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு கேட்டு வருகிறது. சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டால், தடுப்பூசியால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு பைசர் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர முடியாது. 

 

இந்தநிலையில் பைசர் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அந்த நிறுவன தடுப்பூசிகளுக்கு சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த முகமையிடம் பேசியுள்ள இன்னொரு அதிகாரி, ஆகஸ்ட் மாதத்திலிருந்து தடுப்பூசி இறக்குமதி தொடங்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

 

இதற்கிடையே பைசர் தடுப்பூசியின் ஒரு டோஸின் விலை 730 -876 ரூபாய் வரை விற்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்