Skip to main content

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு; குற்றவாளிகளை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

convicts chawla case get released supreme court

 

கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு தலைநகர் டெல்லி குர்கானிலிருந்து, குதுப்மினாரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த 19 வயது பெண்ணை ராகுல்(27), ரவி(23), வினோத்(23) ஆகிய மூன்று பேர் அடங்கிய கும்பலால் காரில் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்ட மூன்றாவது நாள் ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கடுமையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட ராகுல்(27), ரவி(23), வினோத்(23) ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், காதலை ஏற்றுக்கொள்ளாததால் ரவி  தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு இந்த மூன்று பேர் மீதும் கடத்தல், வன்புணர்வு, கொலை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

 

இவ்வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூவருக்கும் தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்துக் கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரதீப் நந்த்ராஜோக், முக்தா குப்தா ஆகியோர்  மூவருக்கும் தூக்குத் தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டனர். அத்துடன் இரையைத் தேடி அலையும் மிருகங்களைப் போல அலைந்து சமூகத்தில் வாழ்ந்திருக்க வேண்டிய பெண்ணை அழித்துவிட்டனர் என்று காட்டமாகக் கூறியிருந்தனர். 

 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரவி, ராகுல், வினோத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல், ரவி, வினோத் ஆகிய மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.  

 

இந்நிலையில் இந்தத் தீர்ப்பையொட்டி பெண்கள்  மீதான வன்கொடுமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் யோகிதா பஹ்யானா உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார். அப்போது இந்த வழக்கின் தீர்ப்பு முடிந்து வெளியே வந்த அந்தப் பெண்ணின் தாய், யோகிதா பஹ்யானாவிடம் இதுகுறித்து கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், இந்த கும்பல் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பின் அவரது கண்கள் மற்றும் காதுகளில் ஆசிட் ஊற்றப்பட்டு, ஸ்க்ரு ட்ரைவால் கண்களைக் குடைந்து, இன்னும் பல கொடூரமான செயல்களில்  ஈடுபட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்