Skip to main content

பாஜகவினர் மரியாதை செய்த அம்பேத்கர் சிலை; புனிதம் கெட்டுவிட்டதாக சுத்தம் செய்த வழக்கறிஞர்கள்!!

Published on 11/08/2018 | Edited on 11/08/2018

 

bjp

 

 

 

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் தலித் வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள அம்பேத்கர் சிலையை பால் மற்றும் கங்கை நீரால் சுத்தம் செய்தனர். பாஜக மூத்த பிரமுகர் சுனில் பென்சால் அந்த அம்பேத்கார் சிலைக்கு மலையணிவித்ததால் அம்பேத்கரின் புனிதம் கெட்டுவிட்டது என அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

 

 

இதுபற்றி மேலும் அந்த வழங்கறிஞர்கள் கூறும்பொழுது. ஆர்.எஸ்.எஸ் என்றுமே அம்பேத்கருடன்  சேர்ந்து செயல்ப்பட்டதில்லை. அவருக்காக எதுவும் செய்ததில்லை ஆனால் அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்து போராடியவர். ஆனால் தற்போது அவரின் பெயரை கூறிக்கொண்டு தலித்து வகுப்பினரின் வாக்கை பெற நாடகமாடுகிறது பாஜக. பாஜக என்றுமே தலித் சமூகத்தை வெறுக்கிற அரசு  என பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

 

 

இதேபோல் அண்மையில் பாஜக பெண் எம்.எல்.ஏ மனிஷா அனுராகி உத்திரபிரதேசம் மாநிலம் ஹமிப்பூரில் உள்ள ஒரு கோவிலுக்குள் நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிட்டது என்று அப்பகுதி மக்கள்  அந்த கோவிலின் கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.      

சார்ந்த செய்திகள்