Skip to main content

5 நாட்களில் 745 கோடி - சர்ச்சையில் சிக்கிய அமித்ஷா

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
bjp

 

 

 

பாஜக தலைவர் அமித்ஷா இயக்குனராக இருந்துவந்த கூட்டுறவு வங்கி பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது ரூ. 754 கோடி செல்லா நோட்டுகளை வாங்கியதாக வந்த தகவல் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நாடுமுழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 10- ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 30-ஆம் தேதிவரை வங்கி கணக்குகளில் செல்லா நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

 

பொதுத்துறை வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள்,மாவட்ட கூட்டுறவு வங்கிகள் என அனைத்திலும் செல்லா நோட்டுகள் வாங்கப்படும் என முதலில் அறிவித்த மத்திய அரசு மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் செல்லா நோட்டுகள் வாங்கப்படும் பொழுது கருப்புபணமும் அதில் கலக்கப்படும் என்ற சந்தேகத்தில் நான்கு நாட்களில் அதாவது நவம்பர் 14-ஆம் தேதியே மாவட்ட கூட்டுறவு வங்கியில் செல்லா நோட்டுகளை மாற்ற அனுமதி மறுத்துவிட்டது.

 

 

 

தற்போது மும்பையை சேர்ந்த மனோரஞ்சன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுத்துறை ,மாநில கூட்டுறவு, மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு செல்லா நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது என்ற கேள்வியை கேட்டிருந்தார். அது தொடர்பாக மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 7 வங்கிகள் மட்டுமே பதிலளித்துள்ளன மற்ற 14 வங்கிகள் பதிலளிக்க மறுத்துள்ளன. கிடைத்த தகவலில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மட்டும் அதிகப்படியாக 745 கோடியே 59  லட்சம் செல்லா நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குனர் பாஜக தலைவர் அமித்ஷா என்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா கடந்த 2000-ஆம் ஆண்டு அந்த கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

 

அதேபோல் இரண்டாவது இடத்தில் 693 கோடியே 19 லட்சம் செல்லா நோட்டுகளை பெற்ற ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வாங்கி உள்ளது. அந்த வங்கியின் தலைவர் குஜராத் மாநில மந்திரி ஜெயேஷ்ப்பாய் வித்தல்பாய் ராடாடியா ஆவார்.

 

பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கத்தில் பாஜக தலைவர் இயக்குனராக இருக்கும் மாவட்ட கூட்டுறவு வங்கி அதிக நோட்டுகளை மாற்றி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் மனோரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்