Skip to main content

"கரோனா ஏற்படுத்தியுள்ள மாற்றம்" - பிரதமர் மோடி பேச்சு...

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

கரோனா பரவல் நமது வாழ்க்கை முறையையே மாற்றியமைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். 

 

modi speech on panchayat raaj day


பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி இன்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் காணொலி மூலம் உரையாடினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், "கரோனா வைரஸ் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் நாம் எதிர்காலத்தில் பிறரை சார்ந்திருக்காமல் சுயச்சார்புள்ளவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற வேண்டும் என்பதுதான். கிராமங்களும் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் மாறுவது கட்டாயமாகும்.
 

 nakkheeran app



கிராமங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இரண்டு அடி இடைவெளிவிட்டு நின்று மற்றவர்களுடன் பேசுங்கள். இப்படி சொன்னால் மக்களுக்கு எளிதாக புரியும். இதற்குமுன் நமது தேசம் சந்திக்காத ஒரு மிகப்பெரிய சவாலை கரோனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியுள்ளது. மக்களும் புதிய விஷயங்களை கற்கிறார்கள். மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து கடைப்பிடிக்கிறார்கள். அதனால்தான் கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் செயல்பாட்டை உலகமே பேசுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது, இ-கிராம ஸ்வராஜ் போர்டலையும், ஸ்வாமித்வா திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுகுறித்து பேசிய அவர், "இ-கிராம ஸ்வராஜ் போர்டல் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். வளர்ச்சி திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுவரை இதில் தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் நம்முடைய நிர்வாக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்