Skip to main content

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தமிழக அரசியலில் அணுகுண்டாக மாறப்போகிறதா? தமிழிசை பேட்டி!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018


18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு தமிழக அரசியலில் அணுகுண்டாக மாறப்போகிறதா? புஸ்வாணமாக போகப்போகிறதா என்பதை பார்ப்போம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

 

 

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகமே பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பது இன்று மதியம் 1 மணியளவில் வெளியாகவுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் 18 எம்.எல்.ஏக்களின் நிலை என்னவாகும் என்பது தான்.

உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும். வழக்கின் முடிவு எப்படி வருகிறது என்று பார்ப்போம். அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், இல்லையென்றால் புஸ்வாணமாக போகவும் செய்யலாம்.

அதனால் தமிழக அரசியலில் இது அணுகுண்டாக மாறப்போகிறதா? இல்லை புஸ்வாணமாக போகப்போகிறதா என்பதை நாம் ஒரு மணிக்கு தான் பார்க்க முடியும்.

மத்திய அரசை ராகுல் காந்தி எவ்வளவுதான் குறை கூறினாலும், தற்போது ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், பா.சிதம்பரம் அவரது ஆட்சி காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மகன் ஊழல் செய்ய துணை போனவர் என அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்