Skip to main content

“என்னை அடித்து மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள்” - பெண் காவலர்கள் மீது சவுக்கு சங்கர் புகார்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
They told me to apologize savukku Shankar complains about women guards

யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் இந்த கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி மாவட்ட பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இத்தகைய சூழலில் பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தலைமையிலான போலீசார் வேனில் அழைத்து வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

They told me to apologize savukku Shankar complains about women guards

இந்நிலையில் கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் பரபரப்பு புகாரை தெரிவித்தார். காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் தாக்கியதாக சவுக்கு சங்கர் கூறிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சவுக்கு சங்கருக்கு காயம் உள்ளதா என்பதை மருத்துவர்கள் சோதனை செய்ய நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்