Skip to main content

வாக்காளர்களை பரிசுகளுடன் சந்தியுங்கள்! - பாஜகவினருக்கு அமைச்சர் தந்த அறிவுரை

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
Patil

 

தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களைச் சந்திக்கும் போது வெறும் கையோடு செல்லாமல், பரிசுகளோடு செல்லவேண்டும் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி மிராஜ் குப்வாட் மாநகராட்சிக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் குறித்த பாஜகவின் திட்டமிடல் கூட்டம் நேற்று முன்தினம் சாங்லியில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், ‘தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு விட்டன. நம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் வேலைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். குறைந்தது 200 குடும்பங்களையாவது நேரில் சந்தித்து அவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வாக்காளர்களைச் சந்திக்கும்போது வெறும் கையில் செல்லாமல், பரிசுகளோடு செல்லவேண்டும்’ என அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான தனஞ்செய் முண்டே, ‘பாஜகவும், சிவசேனாவும் தகாத முறையில் சேர்த்த பணத்தை தேர்தலில் பயன்படுத்தப் பார்க்கின்றன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்