Skip to main content

கன்னியாகுமரியில் காணாமல் போன சிறுமி; கேரளாவில் மீட்பு!

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
Missing girl in Kanyakumari; Recovery in Kerala

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு எராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் ஆந்திராவைச் சேர்ந்த பாசி மாலை விற்கும் சரஸ்வதி என்பவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரியில் வசித்து வருகிறார். இவர் சுற்றுலா பயணிகளுடன் பாசி மாலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

இத்தகைய சூழலில் சரஸ்வதி 7 வயது மகள் சங்கீதா நேற்றிரவு (12.05.2024) 8 மணியளவில் மாயமானார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பலரும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் சிறுமி கிடைக்கவில்லை. இதனையடுத்து சிறுமி மாயமானது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். 

Missing girl in Kanyakumari; Recovery in Kerala

மேலும் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக சிறுமியிடம் பேசி கொண்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் கன்னியாகுமரியில் காணாமல் போன 7 வயது சிறுமி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றன்கரை பேருந்து நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கேரள போலீஸ் மூலம் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். 

சார்ந்த செய்திகள்