Skip to main content

யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை?

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
Action on YouTuber Irrfan

பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்துள்ளார். அத்தோடு தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பபட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காவல்துறையிலும் இது தொடர்பாக இர்பான் மீது புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து வெளியில் சொல்பவர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்