Skip to main content

விபத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள்; நேரில் சென்ற அமைச்சர்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
18 people were seriously injured in a private bus accident and are undergoing treatment at the hospital

சென்னை நோக்கி  வேன் ஒன்று தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வாலாஜாப்பேட்டை  சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னாள் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கைத்தறி மற்றும்  துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 18 ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்