Skip to main content

அனுபவம் அவசியமில்லை. கமிஷன் கொடுங்க. ஜாயின் பண்ணிக்கங்க... அதிமுகவை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

dmk

 


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,54,065- லிருந்து 3,66,946 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903- லிருந்து 12,237 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,86,935- லிருந்து 1,94,325 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,60,384 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும். கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், பேரிடரில் மக்களைக் காக்க இணைந்து இயங்க வேண்டியது அவசியம். எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்குச் செவிகொடுத்து, சரியானவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தால் கரோனா இந்நேரம் கட்டுக்குள் வந்திருக்கும். மாற்றுக் கருத்துள்ளோரை மதிக்கும் மாண்பை எப்போது கற்கப்போகிறீர்கள்? கரோனா அவசரக்கால பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பணியைத் தனியாரிடம் ஒப்படைத்தது அரசு. ‘அனுபவம் அவசியமில்லை. கமிஷன் கொடுங்க. ஜாயின் பண்ணிக்கங்க’ என்று நடந்த உரையாடல் ஆடியோ வெளிவந்ததும் தேர்வை ரத்து செய்துள்ளனர். இவர்கள் கரோனாவைக் கையாளும் விதத்துக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? என்றும், கரோனா ஒழிப்பில் அரசின் இயலாமையைத் தங்களின் தியாகங்களால் இட்டு நிரப்ப முயலும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் அன்பும் நன்றியும். அர்ப்பணிப்போடு இயங்கும் இவர்களைக் காக்கவேண்டியதும், இவர்களின் தியாகங்களைப் போற்றவேண்டியதும் அரசின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்