திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அத்துமீறி வாகன சோதனையில் ஈடுபட்டதால் ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழந்தனர். இதையடுத்து, தம்பதிகள் உயிரிழக்க அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாலர் காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டி அவர் மீது கொலை வழக்குப் பதியக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதானல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி போக்குவரத்து வட்டார போக்குவரத்துக் ஆய்வாளர் செந்தில்ராம் நேற்று மாலை திடீர் வாகன தனிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த லாரியை போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்ராம் மற்றும் உடன் இருந்தவர்கள் மடக்கி நிறுத்தியுள்ளனர்.
அப்போது லாரி திடீரென நிற்கவும், பின்னால் அதிவேகமாக வந்த கார் லாரி மீது மோதாமல் இருக்க லாரியை முந்தி சென்றது. அப்போது நிலைதடுமாறிய கார் லாரிக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பழனிசாமி, மல்லிகா தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன் அறிவிப்பின்றி போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்ராம், லாரியை நிறுத்தியதே தம்பதியினர் உயிரை பறித்துவிட்டதாக குற்றம்சாட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியனர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.