Skip to main content

முத்து எனக்கு முதல் பாடல் எழுதிய நினைவு... - சீமான்

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

நா.முத்துக்குமாரை தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான 'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்பு முத்துக்குமார் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தது...

 

na.muthukumar seeman



பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே எங்களோடு நெருக்கமானவன் முத்து. அறிவுமதியின் அறையில் நாங்களெல்லாம் ஒன்றுகூடுவோம். அந்த சமயத்தில் வந்த இலக்கியங்கள், பாடல்கள் குறித்து அக்குவேறு ஆணி வேறாக அலசுவான். அவனது தந்தை தமிழாசிரியர் என்பதால் இலக்கிய ஆர்வம் சிறிய வயதிலேயே அவனுக்கு அதிகமிருந்தது. "பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பு அவனுக்கு பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது. அதேபோல அவன் எழுதிய தூர் கவிதையை இலக்கியக் கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா சிலாகித்துப் பேச, அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது அந்த கவிதை. கவியரங்க மேடைகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தன் கவிதைகளால் பலரின் கவனத்தையும் இளம் வயதிலேயே ஈர்த்தவன் முத்து.

ஒரு கட்டத்தில் அவனை தனது உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார் பாலுமகேந்திரா. அவனது கனவு இயக்குநர் ஆவதுதான் என்பது பல பேருக்கு தெரியாது. பாலுமகேந்திரா அழைக்கிறார் என்கிற விசயத்தை முதன் முதலிலில் எங்களிடம்தான் பகிர்ந்துகொண்டான் முத்து. அவரிடம் 4 வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்தான். அறிவுமதி அறையும் எனது வீடும்தான் முத்துவுக்கு எப்போதும் வேடந்தாங்கல். கல்லூரிவிட்டதும் அவன் நேராக வருவது என்னுடைய வீடு அல்லது அறிவுமதியின் அறையாகத்தான் இருக்கும். ஐந்துகோவிலான், சீனு ராமசாமி எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். ஒன்றாகவேதான் சமைத்துச் சாப்பிடுவோம். அப்படி ஒரு நெருக்கமான உறவும் நட்பும் கலந்தது அது.

 

 


அப்படி ஓடிக்கொண்டிருந்த நாட்களில், 'வீரநடை' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த சமயத்தில் ஒருமுறை எல்லோரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "முத்து, இந்த படத்துல பாட்டு எழுதேன்" என நான் சொல்ல, "வேணாம்னே" என அவன் சொல்ல, "இல்லை இல்லை நீ எழுதறே" என எல்லாரும் வலிலியுறுத்தினோம். சரி என ஒப்புக்கொண்டதும் பாட்டுக்கான சூழலை சொன்னேன். ஒரு சாதாரணமான கிராமத்துப் பொண்ணு. அவளுக்கு பல விசயங்களில் பிரமிப்பு இருக்கும், பல விசயங்கள் புடிச்சிருக்கும். அவளுக்கு என்ன என்ன புடிக்கும்ங்கிற மாதிரி பாட்டு வரிகள் இருக்கணும்னு சொன்னேன். அவன் பெயரிலேயே பாட்டை ஆரம்பிச்சான் தம்பி. "முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவ புடிச்சிருக்கு" என்கிற அந்த பாட்டு எல்லோரையும் கவர்ந்தது. பாட்டு முழுக்க ஹைக்கூ படிமத்திலேயே எழுதியிருப்பான். மிகவும் ரசனையாக இருக்கும் அந்த படிமம். 'காதல் தோல்விதானோ ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு, நட்சத்திரம் கால் பதிக்கும் வாத்துக்கூட்டம் புடிச்சிருக்கு' என போகும் அந்தப் பாடலின் வரிகள். இந்தப் பாடலை எந்த நேரமும் எல்லோரும் பாடிக்கொண்டே இருப்போம். இசையமைப்பாளர் தேவாவிடம் ஒருமுறை பாடிக்காட்டியபோது மெய்சிலிர்த்துப்போனார்.
 

 

muthu yuvan seeman



அடுத்தடுத்து, இயக்குநர்கள் வசந்த், ரவிக்குமார், செல்வராகவன், வசந்தபாலன் என பலரும் வாய்ப்புகளைத் தர, புகழ் ஏணியின் உச்சத்துக்கு விரைந்து சென்றான் முத்து. பல பாடல்கள் அவனுக்கு தனித்த அடையாளத்தைத் தந்தன. மிக மிக எளிய நடையில் அவன் எழுதிய 'தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்', 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை', 'பூக்கள் பூக்கும் தருணம்', 'கண் பேசும் வார்த்தைகள்', 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்', 'முதல் மழை எனை நனைத்ததே', 'உனக்கென இருப்பேன்', 'முன் பனியா முதல் மழையா', 'அனல் மேலே பனித்துளி' போன்ற நூற்றுக்கணக்கான பாடல்கள் நவீன காதலின் அடையாளமாக இருக்கின்றன.

 

 

ஒவ்வொரு பாடல் எழுதி முடித்ததும், அதை என்னிடம் வாசித்துக் காட்டி, 'எப்படிண்ணே  இருக்கு?' என என் கருத்தை கேட்பதில் அவனுக்கொரு ஆனந்தம். புகழின் உச்சிக்கு அவன் சென்றுகொண்டிருந்த போதும், ஒரு முறைகூட அவனுக்கு தலைக்கனம் ஏற்பட்டதில்லை. பாட்டெழுதி எவ்வளவு சம்பாதித்தாலும் முடிந்த அளவு மற்றவருக்கு உதவுவதில் அவனிடம் சலிப்பை பார்த்ததில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மன நிறைவு அடையற மனுசன் அவன். கணக்குப் பார்த்து உதவுபவன் அல்ல. உதவியதை திருப்பிக் கேட்கும் பழக்கமும் அவனிடத்தில் இருந்ததில்லை. அப்படியொரு உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரனாக இருந்தான். ஆடம்பர வாழ்க்கையை வெறுத்தவன். வாசிப்புப்பழக்கம் அவனை எப்போதும் ஆக்ரமித்திருக்கும். உலக இலக்கியங்கள், உலகத் திரைப்படங்கள் குறித்து அவனது பார்வை வேறுவிதமாக இருக்கும். அவைகளை படித்து என்னிடம் விவாதிக்கும் போதும் தர்க்கம்புரியும்போதும் தமிழ் இலக்கியங்கள் மீது அவனுக்கிருந்த அசைக்க முடியாத காதலை புரிந்துகொள்ள முடிந்தது.
 

தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், நான் ஊரில் இருந்தால் நேரில் வந்து வாழ்த்துப்பெற்றுச் செல்வான். ஊரில் இல்லையெனில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துப்பெறுவான். அவனது இந்த பிறந்தநாளில் அவன் இல்லை என நினைக்கிறபோதே வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தக்கை ஒன்று, தொண்டையை அடைத்துக்கொள்கிறது. 

 

 

 

 

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.