Skip to main content

கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை...

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம்.


abiramiகுழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் ஹோப் இண்டியா அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம், “""திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.


கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை.


அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்டராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள்.

abirami-childrens



இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை abiramni-caseவிசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப்புத்துறையாக மாறவேண்டும்''’’என்கிறார் அவர்.
 

குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “""18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.


குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு அபிராமி ஆயிரம் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. ""அம்மா... நாங்கள் என்ன பாவம் செய்தோம்'' என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்.


 

 

Next Story

கடுப்பில் டிக்டாக் அக்கவுண்டை டெலிட் செய்த நடிகை....  

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


பிக்பாஸ் சீஸன் 3-இல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம். இதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த அபிராமி, சில விளம்பரப் படங்களிலும், சினிமாவில் வாய்ப்பு தேடியும் வந்தார். 
 

tiktok

 

பிக்பாஸில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஒருசில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அபிராமி டிக்டாக்கிலிருந்து வெளியேறுவதாகத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  “என் பெயரைப் பொய்யாகப் பயன்படுத்தி டிக்டாக்கில் உலா வரும் ஃபேக் ஐடிகளால் உண்மையான ஐடியை டெலிட் செய்யப்போகிறேன். இதேபோலதான் ட்விட்டரிலும் நடந்தது. இன்ஸ்டாகிராமில் என்னுடைய அக்கவுண்ட் வெரிஃபைட் என்பதால் இதை பயன்படுத்துகிறேன். என்னை இன்ஸ்டாகிராமில் மட்டும் பின் தொடருங்கள் மற்ற எந்த சமூக வலைத்தளத்திலும் அக்கவுண்ட் இல்லை ” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

அபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்..."பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

அரவிந்த்

விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் "பிக்பாஸ்-3' ஆரம்பித்து 50 நாட்களாச்சே, இன்னும் எதுவும் ஏடாகூடமா நடக்கலையே, நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.ரேட்டிங் ஏறலையேன்னு பார்த்தோம். நடந்துருச்சு. மதுமிதா மூலம் நடத்திட்டாய்ங்க' என்கிறார்கள் இதையெல்லாம் எதிர்பார்த்திருந்த பார்வையாளர்கள். "பிக்பாஸ்-1'க்கு மக்களிடம் இருந்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் "பிக்பாஸ்-3'க்கு ஆரம்பத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூட இந்த நிகழ்ச்சியை நடத்த ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அவரே நினைத்துப் பார்க்காத பெரிய தொகையை தருவதாக பிக்பாஸின் ஓனரான எண்டிமோல் நிறுவனம் சொன்னதும்தான் ஒத்துக்கொண்டார் கமல்.

 

big boss



அதேபோல் பிக்பாஸ்-1, 2-ஐ போல 3-ல் பெரிய பிரபலங்கள் யாருமே இல்லாததால், ("என்னங்க இது, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முக்கால்வாசி பேர் 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகள் மாதிரி இருக்காங்க' என பொதுமக்களே கமெண்ட் அடித்தனர்) முதல் இரண்டு வாரங்களுக்கு நிகழ்ச்சி டல்லடித்தது. இப்படி டல்லடித்த நேரத்தில்தான் தனது குழந்தை விவகாரம் சம்பந்தமாக வனிதா விஜயகுமாரை விசாரிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் போனது, நிகழ்ச்சியும் பரபரப்பானது. அடுத்த சில நாட்களில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வனிதா, அந்த வீட்டிற்குள் இருக்கும் அபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்''’என ஓப்பனாக பேட்டி கொடுத்தார். நிகழ்ச்சி மேலும் சூடு பிடித்தது. பேட்டி கொடுத்த அடுத்த வாரமே, பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்டாக எண்ட்ரியான வனிதா, போட்டியாளராகி ஆச்சர்யப்படுத்தினார். அதேபோல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நடிகைகள் சிலர் இத்துனூண்டு சைசுக்கு டிரஸ் போட்டு, வலம் வந்ததால் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் செய்துவிட்டது.
 

big boss



அதற்கடுத்து "தென்னிந்திய அழகிப் போட்டி நடத்துவதாகச் சொல்லி பலரிடம் பணத்தை கலெக்ஷன்பண்ணி ஏமாற்றிவிட்டார் மாடலிங்கிலும் சினிமாவிலும் இருக்கும் மீரா மிதுன். இப்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்தார், ஜோ மைக்கேல் என்பவர். இவர் யாருன்னா மீரா மிதுனுக்கு கொடுத்த தென்னிந்திய அழகிப் பட்டத்தைப் பறித்து, அதே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலியும் மாடலிங்குமான சனம் ஷெட்டிக்கு கொடுத்தவர்.

 

big boss



பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற மாநகர போலீசார், "10 நாட்களுக்குள் ஆஜராகி பண மோசடி புகார் சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும்' என நோட்டீசைக் கொடுத்துவிட்டுத் திரும்பினர். அடுத்த மூன்றாம்நாளே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன், “""டைரக்டர் சேரன் என்னை தவறாக கையாண்டார் என சொல்லமாட்டேன். ஆனால் இதற்கான கர்மாவை சேரன் ஒருநாள் எதிர்கொண்டே ஆகவேண்டும்''’என ஒரு தினுசாகப் புகார் கிளப்பினார்.
 

big boss



அடுத்ததாக பஸ்ஸில் பயணிக்கும் பெண்கள் குறித்து, தனது அனுபவம் சார்ந்த சர்ச்சைக் கருத்து ஒன்றைச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பிய "பருத்தி வீரன்'’ சரவணன், சேரனை ஒருமையில் பேசி சலசலப்பைக் கிளப்பினார். இதைப் பார்த்துக் கொதித்துப்போன முன்னணி டைரக்டர்கள் பலர், "பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் உடனடியாக வெளியேற வேண்டும்' என குரல் கொடுத்தனர். பெண்கள் குறித்த சரவணனின் சர்ச்சைக் கருத்திற்கு வெளியில் இருந்து கண்டனம் தெரிவித்த நடிகை கஸ்தூரியும் அடுத்த சில நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியானார். இப்படியெல்லாம் சட்டை கிழியாமல் சண்டை நடந்துகொண்டிருந்தபோதுதான் காமெடி நடிகை "ஜாங்கிரி' மதுமிதா, தனது கையைக் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பகீர் கிளப்பியிருக்கிறார்.
 

big boss



ஆன்மிகம், கடவுள் வழிபாடு என அமைதியாக இருந்த மதுமிதா, தனக்கு வழங்கப்பட்ட டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தார். சாண்டி, தர்ஷன், முகின் போன்ற சக போட்டியாளர்களால் பலமுறை கேலிக்குள்ளாக்கப்பட்ட மதுமிதாவுக்கு சேரனும் கஸ்தூரியும் ஆதரவாக இருந்தனர். மதுமிதாவின் தமிழ்ப் பற்று, தமிழ்க் கலாச்சாரம், போட்டியாளர்கள் பலரால் எரிச்சலாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சக போட்டியாளர்களே மதுமிதாவை வெளியேற்றுவதற்கு ஆதரவாக இருந்தபோதும், மக்களின் வாக்களிப்பால் காப்பாற்றப்பட்டு வந்தார் மதுமிதா. "இது தமிழ் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிதானே, தமிழிலேயே பேசுங்க' என ஷெரினிடமும் அபிராமியிடமும் அடிக்கடி சொல்வார் மதுமிதா. ஒரு நாள் நதி நீர்ப் பிரச்சனை பற்றி பேச்சு வந்த போது, “வருண பகவான் கூட கர்நாடகா போல. அதனால்தான் தமிழ்நாட்டில் மழைகூட பெய்யமாட்டேங்குது''’என்றதும் அருகே இருந்த ஷெரின், ""நான் கூட கர்நாடகாதான்'' எனச் சொன்னதும் அங்கே மோதல் வெடித்திருக்கிறது.


இந்த சமயம் உள்ளே புகுந்த வனிதா, மதுமிதாவைப் பார்த்து, "என்ன பெருசா தமிழ், தமிழ்ங்குற. உனக்கு மட்டும்தான் தமிழ் உணர்வு இருக்கா, மத்தவங்களுக்கு இல்லையா?''’என சவுண்ட் விட்டதும், ""தமிழுக்காக என் உயிரையும் கொடுப்பேன்''’என உணர்ச்சிப்பூர்வமாக பதிலடி கொடுத்திருக்கிறார் மதுமிதா. சும்மா பப்ளிசிட்டிக்காக சீன் போடாத, உயிரைக் கொடு பார்க்கலாம்'' என வனிதா உசுப்பேற்றியிருக்கிறார். வாக்குவாதம் முற்றி, கொந்தளித்த மதுமிதா, கத்தியை எடுத்து இடது கையை அறுத்துக்கொண்டார். மற்ற போட்டியாளர்கள் அமைதியாக இருக்க, சேரனும் கஸ்தூரியும் பதறியடித்து ஓடிவந்து, மதுமிதாவுக்கு கட்டுப் போட்டுள்ளனர். உங்களது தமிழ் உணர்வை அகிம்சை வழியில் காட்டியிருக்கலாமே''’என மதுமிதாவிற்கு ஆறுதல் கூறினார் கமல். ஆனாலும் மதுமிதாவின் இந்த செயல் பிக்பாஸ் சட்டத்திற்கு எதிரானது என்பதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா, விஜய் டி.வி.யின் வழக்கறிஞர் பிரசாந்த் மூலம் மதுமிதா மீது கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். ""பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா, எங்களது ஒருங்கிணைப்பாளர் டீனாவுக்கு வாட்ஸ்-அப் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனக்குச் சேரவேண்டிய சம்பளப் பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்’’ என மிரட்டும் தொனியில் இருக்கிறது மெசேஜ். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்பதுதான் அந்தப் புகார். கிண்டி இன்ஸ்பெக்டர் சந்துருவும் உடனே வழக்கு பதிவு செய்து, சி.எஸ்.ஆரும் கொடுத்துவிட்டார். 

தற்கொலை முயற்சி, போலீஸ் கேஸ் என பரபரப்புக்குள்ளாகியிருக்கும் நடிகை மதுமிதா, கடந்த 22-ஆம் தேதி மாலை மீடியாக்களைச் சந்தித்தார். ""எனக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கிப் பணம் 22 லட்சத்தைத்தான் கேட்டேனே தவிர தற்கொலை மிரட்டல் விடுக்கவில்லை. அவர்கள் கொடுத்த புகாரால் நானும் எனது குடும்பமும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். இனிமேலாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்'' என்றார். சுற்றிலும் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தாலும், "பிக்பாஸ்' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை என்றார்.