Skip to main content

இந்தத் தேர்தலில் இவர்கள்தான் எண்டெர்டெயின்மெண்ட்டா???

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

தேர்தல் களம் நாளுக்குநாள் பரபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் 30 நாட்களே இருக்கின்றன. இன்று முதல்கட்ட வேட்புமனுதாக்கல் தொடங்கியுள்ளது.

deepa TR

இதுவரை மதிமுக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, அமமுக என பல கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் வேலைகளை மும்முரமாக செய்து வருகின்றன. 
 

இந்நிலையில் நேற்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். விருப்பமனுவின்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டணிக் கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. இருப்பினும் எங்களை யாரேனும் அழைத்தால் அது குறித்து ஆலோசிப்போம். என தெரிவித்திருந்தார். மேலும் 40 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகள் ஆகியவற்றிற்கான விருப்பமனுக்கள் பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
 

நேற்று இலட்சிய திமுகவின் நிறுவனர் டி.ராஜேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இலட்சிய திமுகவின் குறிக்கோள் சட்டமன்ற தேர்தல்தான். மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தியதாலேயே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறோம். தற்போது அதற்கான வேட்பாளர் மனு வாங்கும் நிகழ்வும் ஆரம்பமாகியிருக்கிறது எனக் கூறியுள்ளார். 
 

ஒரு பக்கம் அதிரடி அரசியல், எங்கள் வேட்பாளர் என சமூக வலைதளங்களில் தங்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் தீவிரமாக தெரிவித்துவரும் நெட்டிசன்கள், இவர்களை கலாய்த்து வருகின்றனர்.