Skip to main content

ஆறாத ரணமாக இருக்கும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து... 14 ம் ஆண்டு நினைவு நாள்

Published on 16/07/2018 | Edited on 16/07/2018

உலகையே மனதளவில் உறைய வைத்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14 -ம் ஆண்டு நினைவு நாள் இன்று.  குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

kumbakonam


 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில், ஸ்ரீகிருஷ்ணா என்கிற பெயரில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி மதியம் சமையல் அறையின் மூலம் ஏற்பட்ட தீ பள்ளிமுழுவதும் பரவியதில் 94 குழந்தைகள் கதற, கதற கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

 

94 குழந்தைகள் இறந்த  14 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை  காலை 6 மணிக்கே  குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவரும் தங்கள்  வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும்  குழந்தைகளின் படங்களுக்கு மாலை அணிவித்து,  பிடித்த தின்படங்களை வைத்து படையலிட்டனர், மனம் உறுகி அழுதனர்.

 

 

 

பிறகு குடும்பங்களோடு காவிரியின் வடபுறமாக இருக்கும் பெருமாண்டி இடுகாட்டில் உள்ள குழந்தைகளின் சமாதிகளில் இறந்த குழந்தைகளுக்கு பிடித்தமான  உணவு பழம், பலகாரங்களை வைத்து வழிபட்டனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பூர் அன்னம்மாள் கல்லறையில் உள்ள சமாதியில் வழிபட்டனர்.

 

பிறகு 9 மணிக்கு தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளிமுன் பெற்றோர்கள் கூடினர். அங்கு இரவே 94 குழந்தைகளின் உருவப்படங்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களுக்குமுன் இனிப்பு வகைகளை வைத்தும் அவர்களுக்கு பிடித்தமான துணிகளை வைத்தும், மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்திகளை ஏற்றி குழந்தைகளின் படங்களைப் பார்த்து கதறி அழுதனர்.

 

பின்னர் அந்தப் பள்ளியிலிருந்து பெற்றோர்கள் ஊர்வலமாக புறப்பட்டு காவிரியின் தென்கரையில் உருவாக்கபட்டுள்ள குழந்தைகள் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அகல் விளக்கு ஏற்றி ஊர்வலமாக சென்று மகாமக குளக்கரையில் மோட்சதீபம் ஏற்றி வைத்து கலங்கினர். இதற்கிடையில் பள்ளியின் முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு, உறவினர்கள், தீ விபத்தின்போது படித்த மாணவர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

 

தீ விபத்து வழக்கும்  அது கடந்து வந்த பாதையும் :

கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதற்கு முழுக்க, முழுக்க காரணம் அங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள்தான் என்றும் ஆசிரியர்கள் ஆடி வெள்ளி என்பதால் குழந்தைகளை வகுப்பறையில் வைத்து வெளியில் பூட்டி விட்டு கோயிலுக்கு சென்றனர் என்றும், அப்போது சமையல் கொட்டகையில் ஏற்பட்ட தீ 94 குழந்தைகளை கொன்று விட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

அது தொடர்பான வழக்கு முதலில் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்தது. பிறகு  தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு  2014 ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆர்.பாலாஜி, அவரது நேர்முக உதவியாளர் துரைராஜ், அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகிய 9 பேருக்கும் 2 முதல் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

 

 

பிறகு தண்டனையை எதிர்த்து பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே நேரத்தில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் பள்ளித் தாளாளர் சரஸ்வதி, வழக்கு விசாரணையில் இருக்கும் போதே இறந்துவிட்டார். இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த  உயர் நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி ஆகியோர் தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமலேயே தள்ளிவைத்தனர். 

 

பிறகு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பித்த 286 பக்க தீர்ப்பில், 

"இந்த வழக்கில் முதல் குற்றவாளியான புலவர் பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை மாற்றி அமைக்கப்பட்டு, அவர் இதுவரை சிறையில் அனுபவித்த தண்டனைக் காலம் போதுமானது என்றும், சமையலர் வசந்திக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அவரும் சிறையில் இருந்த தண்டனைக் காலம் போதுமானது. மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேலும் கீழமை நீதிமன்றம் விடுவித்த 11 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது." என 94 குழந்தைகளின் இறப்பிற்கு தீர்பளித்தது.

 

94 குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு, ‘குழந்தைகளை இழந்த வலியைவிட தீர்ப்பின் வலியே அவர்களை இன்றும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.

 

kumbakonam


 

தங்களின் இரண்டு குழந்தைகளையும் தீயிக்கு பலி கொடுத்து விட்டு ஆதரவின்றி தவித்துவரும் இன்பராஜீம் அவரது மனைவியும் கூறுகையில் , "எங்களுக்கு குழந்தைகள் இறந்தபோதுகூட அவ்வளவு வலி தெரியல, எங்க குழந்தைங்க வயசுல இருந்த பிள்ளைங்க கல்லூரிக்கு போவதும் விதவிதமா டிரஸ் போட்டுக்கிட்டு போகிறத பார்க்கும்போது எங்க இரண்டு பிள்ளைங்க ஞாபகம் வரும். எங்களுக்கு இருந்த இரண்டு குழந்தைகளும் இறந்தபோதே நாங்களும் போய்சேர்ந்திருக்கனும், அத செய்யாம இப்ப ஆதரவு இல்லாம வயதான காலத்துல அனாதைகளா நிற்கிறோம்." என்று கலங்கிய படியே கூறினர்.

 

கும்பகோணம் சம்பவம் ஆறாத வடுவாக இன்றும் மக்கள் மனதில் இருக்கிறது. ஆனால் அரசாங்கமோ அதை மறக்கடிக்க துடிக்கிறது.

 


 

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.