Skip to main content

ஏற்கனவே முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்துகள்... தற்போது அறிக்கை!!!

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 05 அன்று இறந்தார். அதைத்தொடர்ந்து அவர் சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க வேண்டுமென்று புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 

jayalalithaa


அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக், தன்னை அந்த சொத்தின் நிர்வாகியாக நியமிக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்த இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்தது. இதுகுறித்து தீபாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 
 

ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை வருமான வரித்துறையின் துணை கமிஷனர் ஜி.ஷோபா சார்பில், துறையின் வக்கீல் ஏ.பி.ஸ்ரீனிவாஸ் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில், வருமான வரித்துறையில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள், கடன்கள் ஆகியவை குறித்த கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.  
 

அந்த அறிக்கையின்படி, சென்னை பார்ஷன் மேனர் கட்டிடத்தின் தரைத்தள கட்டிடம், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடுகள், மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள இடம், போயஸ் கார்டன் போன்றவை ஜெயலலிதாவின் அசையா சொத்துக்களாக உள்ளன. வருமான வரி பாக்கிக்காக இந்த சொத்துகள் வருமான வரித்துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
 

jayalalithaa


இவை தவிர ரூ.1 கோடியே 52 லட்சத்து 57 ஆயிரத்து 673 மதிப்புள்ள நிலமும், ரூ.3 கோடியே 82 லட்சத்து 28 ஆயிரத்து 817 மதிப்புள்ள கட்டிடமும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. வங்கியில், அவரது எல்லாக்கணக்கையும் சேர்த்து, 10 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரத்து 151 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவர் இறக்கையில் கையில் இருந்த ரொக்கம் ரூ.15,086. அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம், பாரம்பரிய பொருட்கள், ஓவியங்கள், சிலைகள், கலைப்பொருட்கள், படகுகள், விமானம் ஆகியவை மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம். 
 

கடந்த 2016 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.16 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரத்து 727 ஆகும். கடந்த 2016-17 கணக்கின்படி ஜெயலலிதாவுக்கு பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. அதாவது, கொடநாடு எஸ்டேட்டில் உள்ள 50 சதவீத பங்கின் மூலம் லாபமாக 1 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 130 ரூபாயும், ராயல் வேலி புளோரிடெக் நிறுவனத்தில் உள்ள 50 சதவீத பங்கு மூலம் கிடைத்த லாபத்தொகை ரூ.1 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 586ம் கிடைத்துள்ளது.
 

ஜெயா பப்ளிகேஷனின் 50 சதவீத பங்குகள் ஜெயலலிதாவிடம் உள்ளது. இதன்மூலம் ரூ. 7 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 593 லாபம் கிடைத்துள்ளது. கிரீன் டீ எஸ்டேட்டில் உள்ள 77 சதவீத பங்குகள் இவரிடம் இருக்கிறது இதன்மூலம் ரூ.12 கோடியே 70 லட்சத்து 40 ஆயிரத்து 128 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பங்குகளின் மூலம் வந்த வருவாயில் நஷ்டத்தை கழித்தபின் வரும் மொத்தம் லாபத்தின் மதிப்பு 7 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 591 ரூபாய்.
 

இந்த நிறுவனங்களின் பங்குகள் மூலம் கொடநாடு எஸ்டேட் மீதுள்ள மூலதன இருப்பு ரூ.13 கோடியே 85 லட்சத்து 57 ஆயிரத்து 763 உட்பட, 40 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 064 ரூபாய் மூலதன இருப்பாக உள்ளது. நிறுவனங்களின் பங்குகளில் உள்ள மூலதன இருப்பு மற்றும் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு என ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.56 கோடியே 41 லட்சத்து 19 ஆயிரத்து 971 என கணக்கிடப்பட்டுள்ளது.
 

கடந்த 1990-91 முதல் 2011-2012 ஆண்டுகளுக்கான ஜெயலலிதாவின் செல்வ வரி (வட்டியுடன் சேர்த்து) 2018 டிசம்பர் 31 வரை, ரூ.10 கோடியே 12 லட்சத்து ஆயிரத்து 404 பாக்கி உள்ளது. இதேபோல் வருமான வரி பாக்கி 2019-18 டிசம்பர் 31 வரை ரூ.6 கோடியே 62 லட்சத்து 97,720 பாக்கி உள்ளது.

 

 

 

Next Story

சொத்து மதிப்பு; பைஜூஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
The next problem that occurred in ByJus

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் பைஜூஸ். கேரளாவைச் சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன்(44) என்பவரால் தொடங்கப்பட்ட இந்தச் செயலியில் இணையதளம் வழியாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறலாம். கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இணையதள வழியாக கல்வி கற்பதற்கு இந்த பைஜூஸ் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், பைஜூஸ் பெரும் வருவாய் ஈட்டியது. மேலும், இதன் காரணமாக போர்ப்ஸ் பணக்காரப் பட்டியலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் இடம்பிடித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு, பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டதால், இணைய வழிமுறையில் கல்வி கற்கப் பலரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பைஜூஸுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கடன் சுமை, ஊழியர்களின் பணி நீக்கம், வருவாய் இழப்பு, அடுத்தடுத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எனக் கடும் பின்னடைவை பைஜூஸ் சந்தித்தது. 

இதனால், பைஜூஸில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்து, தங்கள் பணத்தைத் திரும்ப பெற்று வந்தனர். இதன் காரணமாக, இந்த நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலவாணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ரவீந்திரன் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அந்நிய செலவாணி மேம்பாட்டு சட்டத்தின்படி, சுமார் ரூ.9,362 கோடி அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரவீந்திரன் மீது குற்றம்சாட்டியது.

அடுத்தடுத்து சிக்கல்களைச் சந்தித்து வருவதைத் தொடர்ந்து, ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க, அவருக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை உயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பைஜூஸ் பங்குதாரர்கள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், EGM எனப்படும் பைஜூஸ் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (23-02-24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில், நிறுவனத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடுகள், பொறுப்பற்ற நிர்வாகம் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

அதே வேளையில், EGM கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானங்களையும்ம் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று பைஜூஸ் நிர்வாகம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், EGM கூட்டத்தை நடத்தலாம், ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மார்ச் 13ஆம் தேதி வரை அமலுக்கு வராது எனத் தெரிவித்தது.

இதற்கிடையே, ஓராண்டுக்கு முன்பு பைஜூஸ் நிறுவனர் ரவீந்தரனின் சொத்து மதிப்பு ரூ.14,545 கோடியாக இருந்த நிலையில், தற்போது பூஜ்ஜியமாக சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பைஜூஸ் நிறுவனரின் சொத்து மதிப்பை ஆராய்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவரது சொத்து பூஜ்யமாகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டது.

பைஜூஸ் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் வேளையில், அர்ஜுன் மோகன் தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற 6 மாதங்களில், அர்ஜுன் மோகன் பதவி விலகியுள்ளார். அர்ஜுன் மோகன் பதவி விலகியதை அடுத்து பைஜூஸ் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை ரவீந்தரன் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைஜூஸ் நிறுவனப் பொறுப்பில் இல்லாதிருந்தாலும் ஆலோசகராக அர்ஜுன் மோகன் தொடருவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் ஏற்கெனவே மோசமாக இருக்கும் வேளையில், சி.இ.ஓ அர்ஜுன் மோகன் வெளியேற்றம் கூடுதல் பிரச்சனையாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது. 

Next Story

வெளியான ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Rahul Gandhi's property value released on filed nomination in election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில், வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது.  மனு தாக்கல் செய்ய இன்று (04-04-24) கடைசி நாள் ஆகும். 

இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளித்த பிரமாண பத்திரத்தின்படி, அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது. 

Rahul Gandhi's property value released on filed nomination in election

அதன்படி, ராகுல் காந்தி, பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.4.3 கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்பதாகவும், மியூச்சுவல் பண்டில் ரூ.3.81 கோடிக்கு வைப்பு நிதியாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சம் இருப்பதாகவும், கையிருப்பாக ரூ.55,000 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.9.24 கோடி எனவும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.11.15 கோடி எனவும் தெரிவித்துள்ளார். 

ரூ.9 கோடி மதிப்பில் குருகிராமத்தில் சொந்த அலுவலகம் இருப்பதாகவும், தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு சொந்தமாக கார், அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.