Skip to main content

அழகிரிக்கு செல்வாக்கு இருக்கிறதா இல்லையா?

Published on 06/09/2018 | Edited on 06/09/2018

திமுகவின் தென்மண்டலச் செயலாளராக பொறுப்பு வகித்த அழகிரியின் பொறுப்பை கலைஞர்

 

azhagiri


 

அழகிரியின் விருப்பப்படி செயல்படுவதற்கு இன்னமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நிலையே நீடித்து வந்தது. அவர்கள் கட்சியில் பொறுப்புக் கிடைக்காதவர்களாக இருந்தார்கள் அல்லது, முன்பு பொறுப்பு வகித்து விடுவிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். திமுக வேட்பாளருக்கு எதிராக அவர்கள் கடந்த தேர்தலில் வேலை செய்தார்கள்.

 

திமுகவில் இப்படிப்பட்ட கோஷ்டிகள் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்தக் கோஷ்டிகள் அனைத்தும் கலைஞரின் வெற்றிக்காக உழைப்பதில் இணைந்து செயல்படும். ஆனால், அழகிரி மதுரைக்கு வந்தவுடன் அழகிரி கோஷ்டியாக மாறி திமுகவுக்கு எதிராகவே தேர்தலில் வேலை செய்கிற அளவுக்கு போனார்கள். திமுகவின் வெற்றியையே பாதிக்கச் செய்தார்கள். அழகிரியை கட்சியை விட்டு நீக்கினாலும் அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருடனே இருந்தார்கள்.

 

 

 

ஆனால், 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி திமுகவிலிருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.  "தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தலைமையையும் - கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் தி.மு.கழகத்திலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்" என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவித்தார்.

 

இந்தமுறை மதுரையிலும் சரி, தென் மாவட்டங்களிலும் சரி அழகிரியால் பொறுப்புகளுக்கு கொண்டுவரப்பட்ட யாரும் அவருக்கு ஆதரவாக செல்லவில்லை. மாறாக, ஸ்டாலினைச் சந்தித்து தொடர்ந்து கழகத்தில் பணியாற்றுவதாக உறுதி அளித்து பதவிகளில் தொடர்ந்தனர்.

 

 

 

ஆனால், உண்மை நிலையை உணராமல் தனக்கு தமிழகம் முழுவதும் ஆதரவாளர்கள் இருப்பதாக அழகிரி கூறிவந்தார். ஆனால், அவருடைய ஆதரவாளர்களாகவோ, விசுவாசிகளாகவோ இப்போதும் பொறுப்பில் உள்ள பலர் அழகிரியை பகிரங்கமாக ஆதரிக்க மறுத்துவிட்டனர்.

 

தலைமையுடன் பேச்சு நடத்தி, கட்சியில் உறுப்பினராக இணைவதற்கு முயற்சி செய்யும்படி அவர்கள் யோசனை கூறியிருக்கிறார்கள். ஆனால், அழகிரி கட்சித் தலைமையை மிரட்டும் வகையிலேயே பேசிவருவது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. எனவேதான் அழகிரி திட்டமிட்ட பேரணி தோல்வியடைந்தது என்கிறார்கள்.

 

 

 

அதேசமயம், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொறுப்பில் இருக்கிற அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்கள் விசுவாசத்திற்காக வேன்களையும் ஆட்களையும் சப்ளை செய்திருப்பதாக பேரணியில் பங்கேற்றவர்கள் கூறியதைக் கேட்க முடிந்தது. அவர்கள் கூறியது உண்மையா அல்லது வெற்று பிரச்சாரமா என்பது தெரியவில்லை. ஆனால், அழகிரியின் ஆதரவாளர்களாக இருக்கும் பலர் அவரிடமிருந்து விலகி விரைவில் ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணையும் முயற்சியில் இருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

 

 

 

Next Story

"ஸ்டாலின் மீது இருந்த பாசம் அளவிட முடியாதது; அவசர நிலையின்போது ஸ்டாலினுக்காக கொதித்தெழுந்த அழகிரி..." - காந்தராஜ்

Published on 29/11/2022 | Edited on 30/11/2022

 

xம

 

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் இந்தச் சட்டத்தை அப்போது பதவியிலிருந்த இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் பெரிய அளவிலான களேபரங்கள் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருந்த இந்த அவசரநிலை பிரகடனம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

 

இதன் அடிமூலம் எதிலிருந்து துவங்குகிறது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார் பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ். அவரிடம் இதுதொடர்பாக நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள், " அவசர நிலையின் போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது மு.க.அழகிரி தம்பியின் கைதை தாங்க முடியாமல் துடித்த துடிப்பை நான் அருகிலிருந்து பார்த்தவன். 

 

என் தம்பியை உள்ளே தள்ளியவர்களை சும்மா விடக்கூடாது டாக்டர் என்று கூறுவார். ரொம்ப கோபமாகப் பேசிக்கொண்டே அமருவார். நான் அவரிடம் அழகிரி நாம் எவ்வளவு கோபமாகப் பேசினாலும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. நாம் என்ன செய் முடியும் என்று கூறுவேன். நம்ம கோவத்தை நாம் நமக்குள்ளேதான் காட்ட முடியும். அதைத்தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பேன். ஆனால் அவர் அப்படி கோவமாகப் பேசுவார் அதே ராஜீவ்காந்தியை உள்ளே தள்ள வேண்டும் என்பார். அப்படி வேகமாகப் பேசுவார். அந்த அளவுக்கு பாசக்கார அண்ணனாக அவர் இருந்தார். 

 

இது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு அரசியலில் இருவரையும் வேறு கோணத்தில் பார்த்து கருத்து கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நேரில் அவர்களின் பாசத்தைப் பார்த்தவன் என்ற அடிப்படியில் இதைக் கூறுகிறேன். ஸ்டாலின் சிறைச்சாலையிலிருந்த வரையிலும் அவருக்கு அந்தக் கோபம் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. எப்போது என்னைப் பார்த்தாலும் தம்பி மீது உள்ள பாசத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்று மத்திய அரசை விமர்சனம் செய்வார். அவர்களை விடக்கூடாது என்று கோபமாகப் பேசுவார். அந்த அளவுக்கு ஸ்டாலின் மீது பாசமாக இருந்தார்".

 

 

Next Story

திமுக கூட்டணி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்த அழகிரி ஆதரவாளர்! 

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

Alagiri supporter who made the DMK alliance candidate lose the deposit!

 

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 

 

அதேபோல், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 26 வார்டுகளில் திமுகவும், 7 வார்டுகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், மதுரை 47வது வார்டில் அழகிரியின் தீவிர ஆதரவாளர் முபாரக் என்பவரின் மனைவி பானு சுயேட்சையாக போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர், 4,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகளா மற்றும் அதிமுக வேட்பாளர் ரூபினி ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.