Skip to main content

மல்யுத்தத்தில் மெர்சல் செய்யும் இந்திய பெண்கள்! 

Published on 03/03/2018 | Edited on 03/03/2018

கிரிகிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கிக்கில் மல்யுத்தத்திற்கான 'சீனியர் ஏசியன் சாம்பியன்ஷிப் ' போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 28 வயதான நவ்ஜோட்  கவுர், பெண்களுக்கான 65 கிலோ எடை  பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

novjot kaura

இந்தியாவின் கவுர், ஜப்பானை சேர்ந்த மியா இமாய்யை  இறுதிப்போட்டியில் நேற்று எதிர் கொண்டார். இதில் 9-1 கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வென்றார்.  சீனியர் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார், நவ்ஜோட் கவுர். இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏசியன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளியும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளில் வெண்கலமும் வென்றுள்ளார்.

shakshi malik

இதே போல் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்க்ஷி மாலிக் பிலே ஆஃப் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ஆயுலிம் கஸ்மிவாவை எதிர்கொண்டார்.  இதில் 10-7 என்ற புள்ளி கணக்கில் வென்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

vinesh phogat

50 கிலோ பிரிவில் வினிஷ் போகட் சீன வீராங்கனை சுன் லீயிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் தங்கத்தைப் பறிகொடுத்து  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.  

sangeetha bohat

59 கிலோ பிரிவில், சங்கீதா போகட் கொரிய வீராங்கனை ஜியுன் உம்மை 9-4 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியா மொத்தமாக 6 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் தங்கம் ஒன்று, வெள்ளி ஒன்று, வெண்கலம் நான்கு என்று பெற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 8ஆம் இடத்தில் உள்ளது. இதில் 12 பதக்கங்கள் வென்று சீனா முதிலிடத்தில் உள்ளது. 

இதில் பதக்கம் வென்றுள்ள வினிஷ் போகட் மற்றும் சங்கீதா போகட் சகோதரிகளாவர். இவர்களின் கதையை மையமாகக்கொண்டுதான் உலகையே கலக்கிய திரைப்படமான "டங்கல்" படம் எடுக்கப்பட்டது.

Next Story

சாக்‌ஷி மாலிக் முடிவு குறித்து ரித்திகா சிங்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
ritika sing about sakshi malik statement

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக், முக்கிய பங்கு வகித்தவர். இதையடுத்து பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் தலைவராக வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்தார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், இதயத்திலிருந்து தான் போராடியதாகவும், ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரரும் நடிகையுமான ரித்திகா சிங் சாக்‌ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுவதாக தெரிவித்தது தொடர்பாக பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “சாக்‌ஷி மாலிக்கைப் போன்ற ஒரு அடையாளமிக்க நபர், இப்படி முடிவெடுத்ததை பார்க்கும் பொழுது மனம் உடைந்தது. இந்தியாவில் பலரை பெருமைப்படுத்திய ஒரு ஒலிம்பிக் வீரர், தனது நம்பிக்கைகளையும் கனவுகளையும் கைவிட்டு, பல வருட கடின உழைப்பையும் கைவிட்டு ‘நான் விலகுகிறேன்’ என சொல்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலில் போராட்டத்தின் போது அவர் பட்ட அவமரியாதை. அதை தொடர்ந்து இது” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பிரியங்கா காந்தியுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு!

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Wrestlers meet Priyanka Gandhi!

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நேற்று முன்தினம் (20.12.2023) தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய மல்யுத்த வீரர்கள் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசினர். அப்போது சாக்‌ஷி மாலிக், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணாக நான் இங்கு வந்துள்ளேன்” எனத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் எம்பி தீபேந்தர் எஸ் ஹூடா கூறுகையில், “பிரியங்கா காந்தி மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கை சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டது நமது பெண் மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மல்யுத்த வீரர்களுக்கு இறுதி வரை ஆதரவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.