நடிகர் திலகம் பட்டத்துடன் திரைத்துறையிலும் மக்கள் மனதிலும் அசைக்கமுடியாதவராய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தவர் சிவாஜி கணேசன். திரைத்துறை கொடுத்த வெற்றியையும், மக்கள் கொடுத்த அன்பையும் நம்பி அரசியலில் குதித்த சிவாஜி, காங்கிரஸ் கட்சியில் மிகமுக்கிய தலைவராகக் குறுகிய காலத்தில் உருவெடுத...