Skip to main content

ஜெ.வை அசிங்கப்படுத்திய மந்திரிகள்! கமல் தந்த உத்தரவாதம்!

Published on 27/02/2018 | Edited on 28/02/2018
""ஹலோ தலைவரே, மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகிட்ட அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தையே புறக்கணிச்சிட்டு சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடியிருக்காங்களே கவனிச்சீங்களா?''’ ""ஆமாம்பா, விழாவைத் தொடங்கும்போது பாடவேண்டிய தமிழ்த்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் திரையிடப்பட்ட விக்ரம் ட்ரைலர்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

k

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி  ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் உலகின் உயரமான கட்டடத்தில் திரையிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது திரையிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளியிடப்போவதாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் பட புரோமோஷன் வேலைகள் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.